_
 Home  Temple  Upcoming Events  Uthsavams  Gallery  Kainkarya Sabhas  Contact Temple  Contributions
                    
                    
Google


                 
Timings Management Facilities
Varusha Uthsavam Chithirai Vaikasi Aani Aadi Aavani Purattasi Ippasi Karthigai Maargazhi Thai Masi Panguni Panchaparvam
1. ThondaradipPodi Azhwar Satrumurai 2. Bhogi ThirukKalyanam 3. Adhyayana Uthsavam 4. ThirupPavai Upanyasam 5. 2012 Archives 6. 2011 Archives 7. 2010 Archives 8. 2009 Archives 9. 2008 Archives 10. 2007 Archives
Veda Parayanam Vanabhojanam Trust Sri Patham
Send an E-Mail
Ubhayams
தேஶிக ஸந்தேஶம் - மாத இதழ்
Desika Sandesam - Monthly Magazine
 Sri Mukham  Editor's Note  Articles/Features Desika Darsanam An Incarnation of Lord Venkateswara Master of Analogy Chithra Desikeeyam Acharya Vamsa Vruksham Paasurappadi Ramayanam Swami Nammazhwar Snippets  Quiz / Results  Junior Quiz Archives  Weekly Paasuram Quest  Valued Views  Contact Site  Tell - A - Friend
                    
                    
                 
Quiz July Prizes / Results Your Score / Answers Notes for Answers July Answers Answer Archives Question Archives Participant Feedback Quiz Master in You First among the Best Cumulative Results 2014
Answer Archives Question Archives Cumulative Results 2013
Dec 15, 2024's Quest Dec 8, 2024's Results Cumulative Results Your Cumulative Tally
General Feedback About Quiz
Paasurappadi Ramayanam


ஸ்ரீமத் க்ருஷ்ண ஸூரயே நம: !

பெரியவாச்சான் பிள்ளை அருளிய
திவ்யப்ரபந்த பாசுரப்படி இராமாயணம்

தனியன்:
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||

பால காண்டம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலுந்திகழ நலமந்தமில்லதோர் நாட்டில், அந்தமில் பேரின்பத்து அடியரோடு ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பன் அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போல் ஆவாரார் துணையென்று துளங்கும் நல்லமரர் துயர்தீர, வல்லரக்கர் வாழிலங்கை பாழ்படுக்க எண்ணி, மண்ணுலகத்தோருய்ய, அயோத்தியெனும் அணிநகரத்து வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய், கௌசலைதன் குலமதலையாய்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றி, குணந்திகழ் கொண்டலாய், மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி, வல்லரக்கர் உயிருண்டு, கல்லைப் பெண்ணாக்கி, காரார்திண் சிலையிறுத்து, மைதிலியை மணம்புணர்ந்து, இருபத்தொருகால் அரசு களைகட்ட மழுவாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றிகொண்டு, அவன் தவத்தை முற்றும் செற்று, அம்பொனெடு மணிமாட அயோத்தியெய்தி, அரியணைமேல் மன்னனாவான் நிற்க;


அயோத்யா காண்டம்

கொங்கைவன் கூனிசொற்கொண்ட கொடிய கைகேயி வரம்வேண்ட, அக்கடிய சொற்கேட்டு, மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய 'குலக்குமரா! காடுறையப்போ!' என்று விடைகொடுப்ப, இருநிலத்தை வேண்டாது ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து, மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து, கலனணியாதே காமரெழில் விழலுடுத்து, அங்கங்கள் அழகுமாறி, மானமரும் மென்னோக்கி வைதேவி இன் துணையா இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின்செல்ல, கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய், பத்தியுடைக் குகன் கடத்தக் கங்கைதன்னைக் கடந்து வனம் போய்ப் புக்கு, காயோடு நீடு கனியுண்டு, வியன்கான மரத்தின் நீழல் கல்லணைமேல் கண்துயின்று சித்திரகூடத்திருப்ப, தயரதன்தான், 'நின்மகன் மேல் பழிவிளைத்திட்டு என்னையும் நீள்வானில் போக்க என் பெற்றாய் கைகேசி! நானும் வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்' என்று வானேற, தேனமரும் பொழிற்சாரல் சித்திரகூடத்து ஆனைப் புரவித் தேரொடு காலாளணி கொண்ட சேனை சுமந்திரன் வசிட்டருடன் பரதநம்பி பணிய, தம்பிக்கு மரவடியை வான்பணயம் வைத்து, குவலயத் துங்கக்கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கருளி விடைகொடுத்து, செருவுடைய திசைக்கருமம் திருத்தப்போய்த் தண்டகாரணியம் புகுந்து;


ஆரண்ய காண்டம்

மறைமுனிவர்க்கு 'அஞ்சேன்மின்' என்று அருள்கொடுத்து, வெங்கண்விறல் விராதன் உக வில்குனித்து, வண்தமிழ்மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி, புலர்ந்தெழுந்த காமத்தால் சீதைக்கு நேராவன் என்ற பொன்னிறங்கொண்ட கடுசினத்த சூர்ப்பணகி கொடிமூக்கும் காதிரண்டும் கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து, கரனோடு தூடணன்தன் உயிரைவாங்க, அவள் கதறித் தலையில் அங்கை வைத்து மலையிலங்கை ஓடிப்புக, கொடுமையில் கடுவிசையரக்கன் அலைமலி வேற்கணாளை அகல்விப்பான் ஓருருவாய மானையமைத்து, செங்கற்பொடிக்கூறை சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து, இலைக்குரம்பில் தனியிருப்பில் கனிவாய்த் திருவினைப் பிரித்து, நீள்கடல்சூழ் இலங்கையில் அரக்கர்குடிக்கு நஞ்சாகக் கொண்டுபோய் வம்புலாங்கடி காவில் சிறையா வைக்க, அயோத்தியர்கோன் மாயமான் மாயச்செற்று, அலைமலி வேற்கணாளை அகன்று, தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத்தேற்றி, கங்குலும் பகலும் கண்துயிலின்றிக் கானகம் படியுலாவியுலாவி, கணையொன்றினால் கவந்தனை மடித்து, சவரி தந்த கனியுவந்து;


கிஷ்கிந்தா காண்டம்

வனமருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு, மராமரமேழெய்து, உருத்தெழு வாலிமார்பில் ஒருகணை உருவவோட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக்கதிர்முடி அரசளித்து, வானரக்கோனுடனிருந்து, வைதேகிதனைத் தேடவிடுத்த திசைக்கருமம் திருத்தத் திறல்விளங்கு மாருதியும் மாயோன் தூதுரைத்தல் செய்ய;


சுந்தர காண்டம்

சீராரும் திறலனுமன் மாகடலைக் கடைந்தேறி மும்மதிள் நீளிலங்கை புக்கு, கடிகாவில் வாராரும் முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு "நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்! அயோத்திதன்னில் ஓரிடவகையில் எல்லியம் போதினிதிருத்தல் மல்லிகை மாமாலை கொண்டங்கார்த்ததும், கலக்கிய மாமனத்தனளாய்க் கைகேயி வரம் வேண்ட, மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய, குலக்குமரா! காடுறையப்போ!' என்று விடைகொடுப்ப, இலக்குமணன் தன்னோடு அங்கேகியதும், கங்கைதன்னில் கூரணிந்த வேல்வலவன் குகனோடு சீரணிந்த தோழமை கொண்டதுவும், சித்திரகூடத்திருப்பப் பரதநம்பி பணிந்ததுவும், சிறுகாக்கை முலைதீண்ட மூவுலகும் திரிந்தோடி, 'வித்தகனே! இராமா! ஓ! நின் அபயம்' என்ன, அத்திரமே அதன்கண்ணை அறுத்ததுவும், பொன்னொத்த மானொன்று புகுந்தினிது விளையாட, நின்னன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரானேகப் பின்னேயங்கு இலக்குமணன் பிரிந்ததுவும், அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம் ஈது அவன் கை மோதிரமே!" என்று அடையாளம் தெரிந்துரைக்க, மலர்க்குழலாள் சீதையும் வில்லிறுத்தான் மோதிரம் கண்டு, "அனுமான்! அடையாளம் ஒக்கும்!" என்று உச்சிமேல் வைத்துகக்க, திறல்விளங்கு மாருதியும் இலங்கையர்கோன் மாக்கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று, கடியிலங்கை மலங்க எரித்து, அரக்கர்கோன் சினமழித்து மீண்டு, அன்பினால் அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடியிணை பணிய;


யுத்த காண்டம்

கான எண்கும் குரங்கும் முசுவும் படையாகக் கொடியோனிலங்கை புகலுற்று, அலையார் கடற்கரை வீற்றிருந்து, செல்வ விபீடணற்கு நல்லனாய் விரிநீரிலங்கையருளி, சரண்புக்க குரைகடலை அடலம்பால் மறுகவெய்து, கொல்லைவிலங்கு பணிசெய்ய, மலையால் அணைகட்டி மறுகரையேறி, இலங்கை பொடிபொடியாகச் சிலைமலி செஞ்சரங்கள் செலவுய்த்து, கும்பனோடு நிகும்பனும் பட, இந்திரசித்தழிய, கும்பகரணன் பட, அரக்கராவி மாள, அரக்கர் கூத்தர்போலக் குழமணிதூரம் ஆட, இலங்கை மன்னன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிரச் சிலைவளைத்து, சரமழை பொழிந்து வென்றிகொண்ட செருக்களத்துக் கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும் எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து, மணிமுடி பணிதர அடியிணை வணங்க, கோலத்திருமாமகளோடு செல்வ விபீடணன் வானரக்கோனுடன் இலகுமணி நெடுந்தேரேறி, சீரணிந்த குகனோடு கூடி, அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தியெய்தி, நன்னீராடிப் பொங்கிளவாடை அரையில் சாத்தி, திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும் முதலா மேதகு பல்கலன் அணிந்து, சூட்டு நன்மாலைகளணிந்து, பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய, வடிவிணையில்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை மலர்க்குழலாள் சீதையும் தானும் கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.


பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரனம்.


* * *








www.svdd.com - © Sri Vedantha Desikar Devasthanam, Mylapore, Chennai.